தென்றல்

என் மதியில் எழும் எண்ணங்களை எழுத்துருவில் பதிப்பதற்கான முயற்சி....

Saturday, March 18, 2006

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தேசிய விருதும்

'பாரத விலாஸ்' , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருக்கும் படம். இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கவிஞர் வாலி எழுதியுள்ள பாடல் "இந்திய நாடு என் வீடு" என்பதாகும். ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய இந்த படத்திற்கு அகில இந்திய அளவில் விருது வழங்க வேண்டும் என்று உரியவர்கள் முடிவெடுத்து விட்டனர்.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் குறுக்கிட்டு, "சிவாஜி கணேசன் காமராஜருக்கு வேண்டியவர். அவருக்கு கொடுக்கலாமா? கூடாது!" என்று வெட்டி விட்டார்.

கிடைக்க வேண்டிய நியாயமான விருது கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்டது!

அடுத்ததாக இன்னும் ஒரு வஞ்சகச்செயல்.

'முதல் மரியாதை' சிவாஜிக்கு விருது வழங்கலாம் என்று தேர்வுக் கமிட்டி பரிந்துரை செய்ய இந்த முறை கோடரி போட்டவர் சோனியாஜி!

சிவாஜிக்கு வர வேண்டியதை அமிதாப்பச்சனின் மனைவி ஜெயபாதுரிக்கு கொடுக்கலாம் என்று சோனியாஜி சொல்லி விட்டார்.

விருதுகள் கொடுப்பதில் இப்படி எல்லாம் நடக்கிறதா?

[நன்றி : தேவி வாரமஞ்சரி, 26-02-2003, பக். 18]

3 Comments:

At 10:21 PM, Blogger குறும்பன் said...

வேண்டப்பட்டவருக்கு விருது என்பதே நடைமுறை. தமிழ்நாட்டுக்காரர்கள் முடிவெடுக்கும் குழுவில் இருந்தால் தமிழ் படத்திற்கு விருது கிடைக்கும். புரியாதது சோனியா ஏன் "சிறந்த நடிகர் "விருதை அமிதாப்பச்சனின் ""மனைவி ஜெயபாதுரிக்கு"" கொடுக்கலாம் என்று சொன்னார். ;-)

 
At 11:16 PM, Blogger Naarathar said...

குறும்பன்,
அமிதாப்பச்சன் குடும்பத்திற்கும், இந்திராகாந்தி அம்மையாரின் குடும்பத்துக்கும் நீண்ட கால நட்பு.
அதனால் தான் சோனியா அமிதாப்பின்
மனைவியை விருதுக்கு பரிந்துரைத்தார்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை,
தற்போது இரு குடும்பங்களும்
கீரியும் பாம்பும் போல என
டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 
At 1:53 AM, Blogger barathee|பாரதி said...

எத்தணை இகழ்ச்சி அந்த மாபெறும் கலைஞனுக்கு.. கலைஞனாக மட்டும் இருந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் போல. சிவாஜி.. இப்போது கமல்.

 

Post a Comment

<< Home